ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அஜித்குமாருடன் படம் பண்ண ரெடி, ஆனா...'' - வாரிசு தயாரிப்பாளர் சொன்ன கண்டிஷன்

''அஜித்குமாருடன் படம் பண்ண ரெடி, ஆனா...'' - வாரிசு தயாரிப்பாளர் சொன்ன கண்டிஷன்

அஜித் குமார் - தில் ராஜு

அஜித் குமார் - தில் ராஜு

இதுகுறித்து விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு தமிழ் படம் என்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகிவருவதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடைபெற்றது சர்ச்சையானது. இதுகுறித்து விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு தமிழ் படம் என்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

வாரிசு திரைப்படம் அனைத்து அம்சங்களும் நிறைந்த குடும்ப படமாக உருவாகிவருகிறது. தங்கச்சி சென்டிமென்ட், அப்பா, அம்மா சென்டிமென்ட் என குடும்ப உறவுகளை மையப்படுத்திய ஆக்சன் படங்களில் நடித்துதான் மக்களின் மனங்களில் விஜய் இடம் பிடித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதம், விவசாயம் போன்ற பொது பிரச்னைகளை கையாளும் படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். இதனால் விஜய் குடும்ப சென்டிமென்ட் படங்களில் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்தது.

இந்த நிலையில் அந்த குறைகளைப் போக்கும் விதமாக தற்போது வாரிசு படத்தில் விஜய் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. டிரெய்லர் வைத்துப்பார்க்கும்போது, சரத்குமார் - ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம் என இரண்டு மகன்கள் பொறுப்பாக பிசினஸை கவனிக்க, கடைசிப் பிள்ளையான விஜய் பொறுப்பற்று திரிகிறார். இதனால் சரத்குமாருக்கு அவர் மீது வருத்தம். இந்த நிலையில் குடும்ப தொழிலில் பிரகாஷ் ராஜ் மூலம் பிரச்னை வருகிறது. இதனையறிந்த விஜய் தலைமை பொறுப்பை ஏற்று, தனது குடும்ப தொழிலை சரிவிலிருந்து எப்படி மீட்கிறார் என்பது கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாரிசுடு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய தில் ராஜு வாரிசுடு படம் வருகிற 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்தார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம் 12 ஆம் தேதியும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா 13 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதன் காரணமாவே வாரிசுபடத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த தில் ராஜு ரசிகர்கள் தெலுங்கு ஹீரோக்கள் படங்களைத் தான் முதலில் பார்க்க வேண்டும். அதனால்தான் வாரிசுடு படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும அஜித் குமார் படத்தை தயாரிப்பீர்களா என்று சரியான ஸ்கிரிப்ட் அமைந்தால் அஜித் குமார் சாருடனும் இணைவேன் என்றார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu