ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu Vijay: சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு விஜய்!

Varisu Vijay: சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு விஜய்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

சென்னை மெட்ரோ ரயில் முழுவதும், வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெட்ரோ ரயிலில் நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ‘ரஞ்சிதமே’ பாடலும், இரண்டாவதாக ‘தீ தளபதி’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதையடுத்து வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் முழுவதும், வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

தவிர, அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2023 பொங்கல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay