ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரயில் முழுக்க விஜய்யின் வாரிசு போஸ்டர்... தெறிக்க விடும் புரொமோஷன்!

ரயில் முழுக்க விஜய்யின் வாரிசு போஸ்டர்... தெறிக்க விடும் புரொமோஷன்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக நடந்த 'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழா, புத்தாண்டு விருந்தாக ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அடுத்த படமான 'வாரிசு' 2023 பொங்கல் அன்று திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் திருவிழாவாக இருக்கும். 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல பல புரொமோஷன் பிளான்களை கையில் எடுத்துள்ளனர்.

இதையடுத்து சென்னை - திருவனந்தபுரம் இடையே பயணிக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 'வாரிசு' போஸ்டர் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று இரவு முதல் பயன்பாட்டுக்கு வந்தது, அதை படம் பிடித்து ட்வுட்டரில் பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.

விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ள தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களை இந்த ரயில் உள்ளடக்கியதால் 'வாரிசு' தயாரிப்பாளர்களின் விளம்பரத் திட்டம் நன்றாக கை கொடுத்துள்ளது. அதோடு இன்னும் சில ஆச்சரியமான திட்டங்களும் அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து பல விமானங்களும் வாரிசு விஜய்யின் படங்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளன.

விக்ரமின் மலரும் நினைவுகளை தூண்டிய அந்த வீடியோ!

கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக நடந்த 'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழா, புத்தாண்டு விருந்தாக ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு அதே நாளில் அல்லது ஒரு நாள் கழித்து டிரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 'வாரிசு' தெலுங்கில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகிறது. இதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Thalapathy vijay