Home /News /entertainment /

Varisu: சென்னை வேண்டாம்... முடிவை மாற்றிய வாரிசு குழுவினர்

Varisu: சென்னை வேண்டாம்... முடிவை மாற்றிய வாரிசு குழுவினர்

வாரிசு படத்தின் 3வது போஸ்டர்

வாரிசு படத்தின் 3வது போஸ்டர்

கடந்த மூன்று மாதங்களாக ஹைதராபாத்தில் போடப்பட்டிருந்த செட்டில் படப்பிடிப்பை முடித்த 'வாரிசு' குழுவினர், தற்போது விசாகப்பட்டினத்தில் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

    நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்திற்காக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து வாரிசு படம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

    'வாரிசு' படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் அந்த திட்டத்தை மாற்றியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஹைதராபாத்தில் போடப்பட்டிருந்த செட்டில் படப்பிடிப்பை முடித்த 'வாரிசு' குழுவினர், தற்போது விசாகப்பட்டினத்தில் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ஆனால் ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, இடங்கள் குறித்த விபரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

    இளையராஜா இசைப்பள்ளியையும், கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க பிரபல இயக்குநர் விருப்பம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விசாகப்பட்டினத்தில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், முழு படப்பிடிப்பும் அக்டோபரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, எஸ்.ஜே. சூர்யா, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Tamil Cinema

    அடுத்த செய்தி