ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீ தளபதி.... வாரிசு படத்திலிருந்து வெளியான புத்தாண்டு போஸ்டர்!

தீ தளபதி.... வாரிசு படத்திலிருந்து வெளியான புத்தாண்டு போஸ்டர்!

'வாரிசு' விஜய்

'வாரிசு' விஜய்

குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக வாரிசு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப கிளைமேக்சில் விஜய் எமோஷனலான நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது என பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்த்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில், 1990களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக இருந்தார், அந்த நடிகரை விட அதிகம் வெற்றிபெற வேண்டும் என்று ஓடினேன். அந்த நடிகர் ஜோசஃப் விஜய். உங்களுடன் நீங்கள் போட்டிபோடுங்கள் என்று பேசியிருந்தார். முதலில் நடிகர் அஜித்தை சொல்கிறாரோ என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் ஜோசஃப் விஜய் என்றது ஆச்சரியமாக இருந்தது. பலருக்கும் அவரது பேச்சு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். துணிவு படமும், வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் துணிவு படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் நடிகர் விஜய்தான் நம்பர் 1, நடிகர் அஜித் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்று கொளுத்திப்போட சமூக வலைதளங்கள் பற்றி எரிந்தது. யார் நம்பர் 1 நடிகர் என்று பெரும் விவாதங்களே நடந்தன.

இந்த நிலையில் எப்பொழுதும் அஜித் படங்களுக்கு இல்லாத அளவுக்கு துணிவு படத்துக்கு பெரிய அளவில் புரமோட் செய்யப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் வானத்தில் துணிவு படத்தின் போஸ்டர் பறக்கவிடப்பட்டது. வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் இதற்கு காரணம் என்று விஜய் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். மேலும் நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என அஜித் பேசியதை சுட்டிக்காட்டி, அப்போ துணிவு நல்ல படம் இல்லையா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

முன்னதாக புத்தாண்டு தினமான இன்று வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் புத்தாண்டு வாழ்த்துடன் வாரிசு படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. கோட் சூட்டுடன் படு ஸ்டைலிஷாக கால் மேல் கால் போட்டு விஜய் அமர்ந்திருக்க தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற டாக் லைனுடன் போஸ்டர் அமைந்துள்ளது.

குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக வாரிசு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப கிளைமேக்சில் விஜய் எமோஷனலான நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது என பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்துக்கு தானே வில்லன் எனவும் அவர் தெரிவித்திருந்ததன் காரணமாக ரசிகரகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம் விஜய் - பிரகாஷ் ராஜ் காம்போவில் வெளியான கில்லி, சிவகாசி, போக்கிரி போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்றவை. அந்த வரிசையில் வாரிசு இடம் பெறும் என்பது ரசிகர்களின் அதீத நம்பிக்கையாக இருந்துவருகிறது.


First published:

Tags: Actor Thalapathy Vijay, Thunivu