Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெண்களுக்கு 'வாரிசு' சிறப்புக் காட்சி - பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக கொண்டாட்டம் - எங்க தெரியுமா?

பெண்களுக்கு 'வாரிசு' சிறப்புக் காட்சி - பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக கொண்டாட்டம் - எங்க தெரியுமா?

சிறப்புக் காட்சியில் வாரிசு படத்தைக் கண்டு ரசிக்கும் பெண்கள்

சிறப்புக் காட்சியில் வாரிசு படத்தைக் கண்டு ரசிக்கும் பெண்கள்

கோவையில் வாரிசு திரைப்படம்  பெண்களுக்கு என பிரத்யேக காட்சியினை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடி அருகே  கவிதா சினிமாஸ் என்ற  திரையரங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த திரையரங்கில் வாரிசு திரைப்படம்  பெண்களுக்கு என  பிரத்யேககாட்சி இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய் மக்கள் இயக்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. மேலும்  குடும்பங்கள் கொண்டாடும்  படம் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், பெண்களுக்கு என   கோவை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. திரையரங்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பெண்களாகவே இந்த படத்தைக் கண்டு ரசித்தனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ் தலைமையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திரையரங்கிற்கு வந்திருந்த பெண்கள் ஜமாப் இசைக்கு நடனமாடியும் , பட்டாசு வெடித்தும் உற்சாகமாக படத்தை கண்டு ரசித்தனர்.

First published:

Tags: Coimbatore, Varisu