ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் 'வாரிசு' படத்திலிருந்து வெளியான ரகளையான காட்சி - ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் 'வாரிசு' படத்திலிருந்து வெளியான ரகளையான காட்சி - ரசிகர்கள் உற்சாகம்

வாரிசு படத்திலிருந்து விஜய், ராஷ்மிகா, யோகி பாபு

வாரிசு படத்திலிருந்து விஜய், ராஷ்மிகா, யோகி பாபு

Varisu | நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்திலிருந்து ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் துள்ளாத மனமும் துள்ளும் காலத்து விஜய்யை மீண்டும் திரையில் பார்த்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விஜய்க்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஒரு காட்சியில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லே போல நடித்திருக்கிறார் விஜய்.

மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த கில்லி, சிவகாசி, போக்கிரி போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்று, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டுவருகின்றன. தமனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜிமிக்கி பொண்ணு பாடலையும், ரஞ்சிதமே பாடலையும் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இந்தப் படம் டிரெய்லரில் பார்த்த அதே குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் ரசித்த விஜய் - யோகி பாபு காட்சி தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதுவரை படம் பார்க்காதவங்களுக்கு இந்த வீடியோ மகிழ்ச்சியை அளித்துள்ளது.

' isDesktop="true" id="871457" youtubeid="q6tzGGK6cAo" category="cinema">

விஜய்யிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதனை பக்கவாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வம்சி. குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் அதில் இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பாடலாசிரியர் விவேக் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். திரைக்கதையிலும் அவர் கவனம் செலுத்தியிருக்கிறார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Thunivu, Varisu