Home /News /entertainment /

ஹைதராபாத்துக்கு குட் பை சொன்ன விஜய்யின் வாரிசு டீம்!

ஹைதராபாத்துக்கு குட் பை சொன்ன விஜய்யின் வாரிசு டீம்!

தளபதி 66 - வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தளபதி 66 - வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்யின் வாரிசு படத்தின் ஹைதரபாத் அட்டவணை தற்போது முடிவடைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் நடந்து வந்த 'வாரிசு' படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜய், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்குகிறார். இப்படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இதற்கிடையில், ஹைதராபாத் ஷூட்டிங் ஷெட்யூல் முடிவடைந்து, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஷாம் ஆகியோரும் சென்னை திரும்பியுள்ளனர்.

    ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    விமான நிலையத்தில் நடிகர் ஷாமுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராம், "ஹைதராபாத்தில் ஒரு அழகான ஷூட்டிங் ஷெட்யூலுக்குப் ஷாம் பாயுடன் சென்னை திரும்பும்போது... அவருடன் இருந்தால் மந்தமான தருணம் எப்போதும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

    சுனைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இப்படம் குடும்பத்தை மையமாக கொண்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் காட்சிகள் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் முழு படமும் முடிவடையும் என்று கூறப்படும் நிலையில், 2023 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay

    அடுத்த செய்தி