ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

Varisu: 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

வாரிசு

வாரிசு

வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

    இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘வரிசு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாரிசு படத்தில் இரண்டு ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதோடு வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் குடும்பத்தை மையப்படுத்திய கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பிறைநிலவு மறையும் முன்னே முழுநிலவாய் வந்து நிற்பார் - ஐஸ்வர்யா ராயை பாராட்டிய பார்த்திபன்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் மாதத்திற்குள் வாரிசு படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay