ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யு சான்றிதழ் பெற்ற விஜய்யின் வாரிசு! ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

யு சான்றிதழ் பெற்ற விஜய்யின் வாரிசு! ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

விஜய்

விஜய்

வாரிசு படத்தின் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று (ஜனவரி 3) காலை தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம்.  பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு பிரமாண்டமாக வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது ட்ரைலருக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். வம்ஷி பைடிபள்ளி இயக்கியிருக்கும் வாரிசு திரைப்படம், உணர்வு மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த ஒரு ஃபேமிலி பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

2023 புத்தாண்டு அன்று சன் டிவி-யில் ஒளிபரப்பான வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிகழ்வில் விஜய்யின் டிரஸ்ஸிங் சென்ஸ் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்தார்.

வாரிசு படத்தின் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில், டிரைலர் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். இதையடுத்து ட்ரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு!

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடம் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay