ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காப்பியடிக்கப்பட்டதா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? உண்மையை உடைத்த ஓட்டோ நிறுவனம்

காப்பியடிக்கப்பட்டதா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? உண்மையை உடைத்த ஓட்டோ நிறுவனம்

வாரிசு போஸ்டர் சர்ச்சை

வாரிசு போஸ்டர் சர்ச்சை

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஒரு வெள்ளை கட்டிட பின்னணியில் ஃபார்மல் கிரே உடையில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வாரிசு பட போஸ்டர் சர்ச்சைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் மூன்று வெவ்வேறு தோற்றங்கள் கொண்ட போஸ்டர்களை வெளியிட்டனர் படக்குழுவினர்.

2023 பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை தமன்.

வாரிசு போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் பைக் குறித்த சுவாரஸ்ய தகவல்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஒரு வெள்ளை கட்டிட பின்னணியில் ஃபார்மல் கிரே உடையில் இருந்தார். இதனை நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்த ஓட்டோ விளம்பரத்தில் இருந்து காப்பி அடித்திருப்பதாக இணையத்தில் பகிரப்பட்டது. தற்போது இந்த சர்ச்சைக்கு ஓட்டோ நிறுவனமே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


பிரபல நடிகரின் அண்ணனுக்கு 4-வது மனைவியாகும் வீட்ல விசேஷம் பட நடிகை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில், “எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். வாரிசு பட போஸ்டர் ஓட்டோவின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல. சில மீம் கிரியேட்டர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படக்குழுவுக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என விளக்கமளித்துள்ளனர் ஓட்டோ நிறுவனத்தினர்.

First published:

Tags: Thalapathy vijay