ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்!

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வாரிசு படத்தின் முதல் பாடல் குத்து பாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தயாரிப்பாளர்களின் திட்டத்தின்படி விஜய்யின் 'வாரிசு' விரைவில் முடிவடையவிருக்கிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, 'வாரிசு' முதல் சிங்கிள் 'குத்து' பாடலாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் தமன். இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ஒரு நாட்டுப்புற பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதாமக் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பல நாட்டுப்புற இசைக்கருவிகளுடன் தமன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை புறநகரில் நடந்து வருகிறது. அதில் சில சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை இவர் தான்!

    வம்ஷி பைடிபள்ளி இயக்கி வரும், 'வாரிசு' படத்தில் விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த எமோஷனல் ஃபேமிலி படமான 'வாரிசு' 2023 பொங்கலுக்கு வெளியாகிறது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Thalapathy vijay