ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu First Single: வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ அறிவிப்பே ட்ரெண்டிங்... இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்!

Varisu First Single: வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ அறிவிப்பே ட்ரெண்டிங்... இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    Varisu First Single: வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ஃப்ரோமோ அறிவிப்பு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விஜய் படங்களைப் பொறுத்தவரை பட அறிவிப்பிலிருந்து ரிலீஸ், வசூல் என எல்லாமே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

    அந்த வகையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இதைத் தொடர்ந்து, எப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகும் என அறிவித்தனர் படக்குழுவினர்.

    இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து #VarisuFirstSingle என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay