ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ranjithame: 2.7 கோடி பார்வைகளைக் கடந்த விஜய்யின் ரஞ்சிதமே பாடல்!

Ranjithame: 2.7 கோடி பார்வைகளைக் கடந்த விஜய்யின் ரஞ்சிதமே பாடல்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

சில தினங்களுக்கு முன்பு ரஞ்சிதமே எனத் தொடங்கும், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரஞ்சிதமே பாடல் யூ-ட்யூபில் இதுவரை 2.7 கோடி பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. 

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என முன்பே தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.

    இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்பு ரஞ்சிதமே எனத் தொடங்கும், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. விஜய் குரலில் வெளியான அப்பாடலில் சில நொடிகள் அவர் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. எப்போதும் போல இந்தப் பாடல் வெளியான உடனேயே யூ-ட்யூபில் பார்வைகளின் எண்ணிக்கை அதிகமானது.

    நான் ஒன்றும் சீக்கிரமே இறந்துவிட போவதில்லை...நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா

    ' isDesktop="true" id="833079" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

    இந்நிலையில் தற்போது ரஞ்சிதமே பாடல் 2.7 கோடி பார்வையாளர்களுடன் யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay