ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu First Single: இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

Varisu First Single: இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, அடுத்த வாரம் முதல் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என சூசகமாக தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் வாரிசு படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

    தளபதி 67 படத்தில் முக்கிய பாலிவுட் பிரபலம்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே இந்த வாரம் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கேற்றார் போல், சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, அடுத்த வாரம் முதல் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என சூசகமாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் 10:45AM-க்கு அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். இதையடுத்து மிகுந்த உற்சாகமடைந்தனர் விஜய் ரசிகர்கள். காலை 10.45 மணிக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது வாரிசு படக்குழு.

    அதாவது படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து, உடனடியாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஃபர்ஸ்ட் சிங்கிளில் ஆரம்பித்து வசூல் வரை பல ரெக்கார்டுகளை வைத்திருப்பவர் விஜய். சில நேரங்களில் தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறார். அந்த வகையில் வாரிசு முதல் சிங்கிள் படைக்கும் சாதனைகளை பொறுத்திருந்து தெரிந்துக் கொள்வோம்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay