முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 3-வது திருமணம் செய்து கொண்டேனா? நடிகை ஜெயசுதா பதில்

3-வது திருமணம் செய்து கொண்டேனா? நடிகை ஜெயசுதா பதில்

ஜெயசுதா

ஜெயசுதா

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற ஜெயசுதா தற்போது 3வதாக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ரூல்ஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹீரோயினாக நடித்தவர் ஜெயசுதா. பின்னர் பாண்டியன் படத்தில் ரஜினிகாந்த்தின் அக்காவாக நடித்திருந்தார். மேலும் தமிழில் அலைபாயுதே, தவசி, தோழா, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் விஜய்க்கு அம்மாவாக இவர் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் ஜெயசுதா நடித்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற ஜெயசுதா தற்போது 3வதாக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ரூல்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.

சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயசுதா, 3வது திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கிறார். தான் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் அந்த நபர் ஒரு இயக்குநர் என்றும் தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக தன்னுடன் இருப்பதாகவும் விளக்கமளித்திருந்தார்.

ஜெயசுதா இரண்டாவாக திருமணம் செய்திருந்த தயாரிப்பாளர் நிதின் கபூர் கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவர் பைபோலார் டிசார்டர் என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Marriage, Varisu