ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்!

விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்!

விஜய்

விஜய்

Varisu box office collection day 1: வாரிசு படம் தமிழகத்தில் ரூ.17 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பகுதிகளில் ரூ.1 கோடியும் வசூலித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படம் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி முதல் நாளில் 26.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், அஜித்தின் துணிவு படத்தின் வசூலை முறியடித்தது. வம்ஷி பைடிபள்ளி இயக்கிய, வாரிசு படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.26.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கியுள்ள 'வாரிசு' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

வாரிசு படம் தமிழகத்தில் ரூ.17 கோடியும், கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பகுதிகளில் ரூ.1 கோடியும் வசூலித்துள்ளது. வெளியான முதல் நாளில், படம் தோராயமாக 67% ஆக்கிரமிப்பைப் பெற்றது. வாரிசு படத்தில் காலை காட்சிகள் 55.6% ஆக்கிரமிப்பையும், பிற்பகல் காட்சிகள் 68.6% ஆக்கிரமிப்பையும் கண்டன. மாலையில் அது 72.4% ஆகவும், இரவு காட்சிகளில் 71.2% ஆக்கிரமிப்பையும் பெற்றன. வாரிசு படத்தின் இரண்டாவது நாள் டிக்கெட்டுகள் ஏற்கனவே 7 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu