ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

விஜய்

விஜய்

இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முழு உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி 1, 2023 அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதன் ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நேரில் காண முடியாதவர்கள், டிவி-யில் பார்த்து ரசிக்கலாம்.

இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நேரத்தில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு படத்துடன் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, வாரிசு தயாரிப்பாளர்கள் ஒரு பிரமாண்ட ஆடியோ வெளியீட்டை ஏற்பாடு செய்தனர். இதில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெரிய கூட்டத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார் விஜய். இந்த நிகழ்வில் பல ஆயிரம் ரசிகர்கள் 'தளபதி' என்று கோரஸாக கூறி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை சன் டிவியில் ஜனவரி 1, 2023 அன்று மாலை 6.30 மணிக்கு பார்க்கலாம்.

உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!

' isDesktop="true" id="862501" youtubeid="R--tt0pH2y4" category="cinema">

வாரிசு முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னர் குடும்ப கதையாக உருவாகியுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Actress Rashmika Mandanna