ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு... சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு... சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

விஜய்

விஜய்

'வாரிசு' தயாரிப்பாளர்கள் இதுவரை மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்வில் கலந்துக் கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. 

விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் ஆடியோ வெளியீடு வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் 'தளபதி 67' இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அதிகாரப்பூர்வமாக தளபதி 67 படத்தை அறிவிப்பாரா எனவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே 2022 ஆம் ஆண்டு முடிவடையும் தருணத்தில், தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாக 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இருக்கும். தற்போது ஆடியோ வெளியீட்டிற்கான செட் வேலைகள் தயாராகி வருகின்றன. மேடை சிவப்பு மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறது.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

தமன் இசையில் 'வாரிசு' படத்தில் விஜய்க்காக, அனிருத் ரவிச்சந்தர் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதை அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நேரலையில் பாடவிருக்கிறார். 'வாரிசு' தயாரிப்பாளர்கள் இதுவரை மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள வாரிசு படத்தில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, குஷ்பு, மீனா, சினேகா, ஷாம், யோகி பாபு, மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Kamal Haasan, Mahesh babu, Shah rukh khan