முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vijay: வாரிசு படக்குழுவுக்கு குட் பை சொல்லும் விஜய்?

Vijay: வாரிசு படக்குழுவுக்கு குட் பை சொல்லும் விஜய்?

வாரிசு

வாரிசு

விஜய் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Varisu Vijay: வாரிசு படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் விஜய் நிறைவு செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதைப்பற்றிய பரபரப்பு இன்னும் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக, வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்களில் இருந்து கசிந்த காட்சிகளும், படங்களும் சமூக வலைதளங்களில் பரவி, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் நடிகர் விஜய் அக்டோபர் 27-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்திற்கான வேலைகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘வாரிசு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தேதியை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.

ஐஸ்வர்யா தனுஷ் இணைவை மறைமுகமாக உறுதிப்படுத்திய கஸ்தூரி ராஜா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்றும்,  விஜய் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

top videos

    சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருந்த லோகேஷ் கனகராஜ், 67 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். விரைவில் தளபதி 67 படம் குறித்த பிரமாண்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அறிவிப்பு தீபாவளியை இன்னும் மகிழ்ச்சியாக்கும் வகையில் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: Actor Thalapathy Vijay