ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: 150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

Thalapathy Vijay: 150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

விஜய் - அட்லீ

விஜய் - அட்லீ

நாயகன் மற்றும் இயக்குனருக்கு ஏற்கனவே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'தளபதி 68' படத்திற்காக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் 68-வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய், தற்போது இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதற்கிடையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் அடுத்தப் படமான 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது. மேலும் இதில் கமல்ஹாசன், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இப்போது கோலிவுட்டின் பரபரப்பான செய்தி 'தளபதி 68' குறித்து தான். படத்தை யார் இயக்குவது மற்றும் தயாரிப்பது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய், அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த திட்டத்தை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு விஜய்யை இயக்க அட்லீ விரும்புகிறாராம். முதலில் ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் முறையே 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களில் ஏற்கனவே விஜய் மற்றும் அட்லியுடன் இணைந்து செயல்பட்டன.

இந்தப் படத்திற்கு அட்லீ ரூ.50 கோடி சம்பளம் பெறவிருக்கிறாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையை அவர் அடையவுள்ளாராம். விஜய் 150 கோடி சம்பளம் பெறுகிறாராம். இது அவரது கேரியரில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

மனைவியை காணவில்லை என காமெடி நடிகர் புகார்... சடலமாக கண்டறிந்த போலீசார்

நாயகன் மற்றும் இயக்குனருக்கு ஏற்கனவே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'தளபதி 68' படத்திற்காக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விஜய்யின் 'தளபதி 67' மற்றும் அட்லியின் 'ஜவான்' படங்களை முடித்த பிறகு 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அட்லீ இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Atlee