ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் தினத்தில் வெளியாகும் குட் நியூஸ்!

விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் தினத்தில் வெளியாகும் குட் நியூஸ்!

விஜய்

விஜய்

சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 67 படத்தின் அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இது தற்காலிகமாக 'தளபதி 67' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருந்தார். 'தளபதி 67' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜும் தளபதி 67 ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.

நேற்று ‘வாரிசு’ படத்தைப் பார்த்துவிட்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், “இவ்வளவு நாட்களுக்குப் பிறகு குடும்பத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தில் விஜய் சாரை இப்படிப் பார்த்தது புத்துணர்வாக இருந்தது. அவரை மிகவும் ரசித்தேன்" என்றார். விஜய்யுடன் அவர் பணியாற்றவிருக்கும் படம் குறித்த கேள்விக்கு, “இந்தப் படம் வெளியாகட்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது வெளியாகி விட்டதால், தளபதி 67 படம் குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

இந்தப் படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக இந்தப் படம் இருக்கும் என ஊகங்கள் இருப்பதால், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' பட அறிவிப்பை போன்று தளபதி 67 படத்துக்கும் அறிவிப்பு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj