Home /News /entertainment /

காதலுக்கு மரியாதை போல ஃபீல் குட் படமாக தளபதி 66 - கதையைக் கேட்டு விஜய் சொன்ன அந்த விஷயம்!

காதலுக்கு மரியாதை போல ஃபீல் குட் படமாக தளபதி 66 - கதையைக் கேட்டு விஜய் சொன்ன அந்த விஷயம்!

தளபதி 66

தளபதி 66

விஜய்யை பல வருடங்களாக ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் விஜய்யின் தளபதி 66 பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று ஃபீல் குட் கதையாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

    விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் குறிப்பாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வலம் வந்தன. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் வம்சி.

    பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. தற்போது இதன் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தளபதி 66 படம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு, இந்தப் படம் விஜய்யின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று ஃபீல் குட் கதையாக இருக்கும் என்றும், இதைக்கேட்ட விஜய், ‘இந்த மாதிரி கதை கேட்டு 20 வருஷமாச்சு’ என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    விஜய்யை பல வருடங்களாக ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay

    அடுத்த செய்தி