Thalapathy 65: தள்ளிப் போகும் விஜய்யின் ’தளபதி 65’ வெளியீடு?

விஜய்

தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் நடன இயக்குனர் இரட்டையர் அன்பரிவ் இப்படத்தில் வேலை செய்கின்றனர்.

  • Share this:
    நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தை முடித்த பின்னர், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவிருந்தார் விஜய்யும் நெல்சனும் தொடங்கவிருந்தனர். இதற்காக சென்னையில் ஒரு பெரிய மால் செட் அமைக்கப்பட்டது. ஆனால் தொற்றுநோய் சூழ்நிலை மற்றும் கோவிட் -19 காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி 65 படம் குறித்த சமீபத்திய தகவல் என்னவென்றால், இப்படத்தை 2022-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

    தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் நடன இயக்குனர் இரட்டையர் அன்பரிவ் இப்படத்தில் வேலை செய்கின்றனர். அதோடு மலையாள நடிகை அபர்ணா தாஸும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், தளபதி விஜய்யின் அடுத்தப் படமான 'தளபதி 66' படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: