விஜய்யின் தொடர்ச்சியான பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர்கள் அவரை இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக்கியது. தற்போது, விஜய்யின் பிரபலத்தை தெலுங்கு மாநிலங்களில் ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக விஜய்யின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. அங்கு வழக்கமான சாதனைகளுடன் அவர் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். 'நண்பன்' தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான விஜய்யின் முதல் தமிழ் திரைப்படமாகும். இதன் தெலுங்கு-டப்பிங் பதிப்பு 2012 குடியரசு தினத்தன்று (தமிழில் ரிலீஸாகி சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் தெலுங்கு மாநிலங்களில் ரசிகர்களை அதிகப்படுத்தினார். இந்நிலையில் நண்பன் தெலுங்கில் வெளியான இந்த சிறப்பு தினத்தை கொண்டாடும் வகையில், #DecadeOfదళపతిSupremacy (தெலுங்கில்
விஜய் பெயர்) விஜய்யின் தெலுங்கு ரசிகர்கள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய்யின் 'அதிரிந்தி' (மெர்சல்) ஃபர்ஸ்ட் லுக் தெலுங்கில் அதிகம் விரும்பப்பட்ட டப்பிங் போஸ்டர் உள்ளிட்ட பல சாதனைகளை தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ளார் விஜய். 'மாஸ்டர்' தெலுங்கு டப்பிங்
பட டீஸர், யூ-ட்யூபில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று, அதிகம் விரும்பப்பட்ட தெலுங்கு டப்பிங் டீஸராக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் அவரது
வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் 2021-ஆம் ஆண்டில் தெலுங்கு மாநிலங்களில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக இருந்தது மாஸ்டர்.
இதற்கிடையே விஜய் தற்போது நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரலில் திரைக்குவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.