தளபதி விஜய் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக தகவல்!

தளபதி விஜய்

இந்தியாவின் முக்கிய பல பிரபல நடிகர்கள் தடுப்பூசி செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

  • Share this:
கொரோனோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்போது பெரும்பாலான மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் கொரோனோ தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதிகபட்சமாக நான்கு இலட்சத்திற்கும் மேலாக தமிழகத்தில் தடுப்பூசியை ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முக்கிய பிரபலங்கள் தடுப்பூசி செலுத்துவதால் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை நடிகர்-நடிகைகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Also Read: Doctor: 4 மொழிகளில் ஓடிடி தளத்தில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும் தடுப்புசி எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட அதில் தடுப்புசி செலுத்தப்படுகிறதா? ஊசி போடுவது போல இல்லையே என்ற சர்ச்சையும் எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல இந்தியாவின் முக்கிய பல பிரபல நடிகர்கள் தடுப்பூசி செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகளும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் அதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவையும் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ளனர்

இதுபோன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து படப்பிடிப்பு ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்த அடிப்படையில் விரைவில் நடிகர் விஜய்யின் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் புகைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: