ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தின் 3வது போஸ்டர் ரிலீஸ்… பைக்குடன் மாஸ் லுக்கில் விஜய்!!

வாரிசு படத்தின் 3வது போஸ்டர் ரிலீஸ்… பைக்குடன் மாஸ் லுக்கில் விஜய்!!

வாரிசு படத்தின் 3வது போஸ்டர்

வாரிசு படத்தின் 3வது போஸ்டர்

Varisu 3rd Look : நேற்றும், இன்றும் வெளியான வாரிசு படத்தின் முதல் 2 போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

  விஜய்யின் 48வது பிறந்த நாளையொட்டி, நேற்றிலிருந்து தளபதி 66 படத்திற்கான அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

  தளபதி 66 படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குடும்பக் கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.44 மணியளவில் வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் குழந்தைகள், பட்டம், பலூன், காய்கறிகள் என கலர்ஃபுல்லான லுக்கில் விஜய் காணப்படுகிறார்.

  பொங்கலுக்காக ஊருக்கு வரும் விஜய், மினி லாரியில் லிஃப்ட் கேட்டு வருவதைப் போன்று இந்த காட்சி இடம்பெறலாம் என யூகிக்கப்படுகிறது.

  இந்நிலையில் தற்போது வாரிசு படத்திலிருந்து 3வது போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

  சூப்பர் பைக்கில் விஜய் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. வாரிசு படத்தில் பைக் ரேஸ் ஏதும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.

  பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

  தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா,ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

  தொடர்ந்து ஆக்சன் படங்களில் விஜய் நடித்து வரும் நிலையில், தளபதி 66 படமான வாரிசு குடும்பக்கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay