முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லியோ படத்துக்கு சின்ன பிரேக்... சென்னை திரும்பிய விஜய் - வைரலாகும் வீடியோ!

லியோ படத்துக்கு சின்ன பிரேக்... சென்னை திரும்பிய விஜய் - வைரலாகும் வீடியோ!

விஜய்

விஜய்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஏற்கனவே தனது படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லியோ படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் விஜய்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 'லியோ' படத்தின் படப்பிடிப்பிலிருந்து ஒரு வாரம் பிரேக் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார் விஜய். அவரை நேற்று (பிப்ரவரி 28) சென்னை விமான நிலையத்தில் காண முடிந்தது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'வாரிசு' திரைப்படம் இன்றோடு (மார்ச் 1) திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்த சாதனையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில், விஜய்யின் சென்னை விஜயத்திற்கும், 'வாரிசு' படத்தின் 50-வது நாளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், இந்த மகிழ்ச்சியான நாளை அவர் படக்குழுவினருடன் கொண்டாட முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஒருவாரம் ஓய்வுக்குப் பிறகு லியோ படப்பிடிப்பில் இணைய விஜய் காஷ்மீர் திரும்புவார் எனக் கூறப்படுகிறது. மேலும் காஷ்மீர் ஷெட்யூல் மார்ச் இறுதிக்குள் முடியும் எனத் தெரிகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஏற்கனவே தனது படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதோடு விஜய் மற்றும் 'லியோ' குழுவுடன் பணிபுரிந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டார்.

பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமான 'லியோ'வில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 19.10.2023 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Thalapathy vijay