ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''1990ல ஒரு நடிகர் எனக்கு போட்டியா வந்தாரு.. அந்த நடிகர விட அதிகமா ஜெய்க்கணும்னு நெனச்சேன்'' - அனல் பறக்க பேசிய விஜய்!

''1990ல ஒரு நடிகர் எனக்கு போட்டியா வந்தாரு.. அந்த நடிகர விட அதிகமா ஜெய்க்கணும்னு நெனச்சேன்'' - அனல் பறக்க பேசிய விஜய்!

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

Varisu Vijay ஒருவர் உங்களை எதிர்த்தால், பிரச்னை வரும். அதற்கு நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசினர். இறுதியாக மேடையேறிய நடிகர் விஜய் பேசியதாவது: - தில் ராஜுவின் வாரிசுக்கு (அவரது மகன்) வாழ்த்துகள். சீக்வல் எப்போ? படத்தோட சீக்வல சொன்னேன்.

காதல் தான் உலகின் மிகப் பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. ரத்தத்துக்கு சாதி தெரியாது. இந்த ஒரு நல்ல குணத்தை ரத்தத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புதான் எனக்கு போதை.

'இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ...'' - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தமன் உருக்கம்

ஒருவர் உங்களை எதிர்த்தால், பிரச்னை வரும். அதற்கு நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1990-ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். பின்னாளில் என்னுடன் அவர் சீரியான போட்டியாளராக மாறினார். அந்த நடிகரின் வெற்றியால் நானும் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஓடினேன். அந்த நடிகரை விட அதிக வெற்றிகளைப் பெற வேண்டும் என்று போராடினேன். நமக்கு அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும். அந்த போட்டியாளர் ஜோசப் விஜய். உங்களுடன் போட்டிபோடுங்கள். நடிகர் சிம்புவுக்கு எனது நன்றி என்று தெரிவித்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu