ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: இணையத்தில் லீக்கான வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல்

Varisu: இணையத்தில் லீக்கான வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல்

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

வாரிசு படத்தில் இருந்து பாடல் காட்சி படப்பிடிப்பு ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு இணையத்தில் லீக்காகியுள்ளது.

  இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விரைவில் இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்?

  படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து வாரிசு படப்பிடிப்பு தளத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இருப்பினும் இந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் வாரிசு படத்தில் இருந்து பாடல் காட்சி படப்பிடிப்பு ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ’ரஞ்சிதமே’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் விஜய் குரலில் ஒலிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது படக்குழுவினருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay