Home /News /entertainment /

விஜய் மகன் சஞ்சய்யுடன் கைக்கோர்க்கும் துருவ் விக்ரம்?

விஜய் மகன் சஞ்சய்யுடன் கைக்கோர்க்கும் துருவ் விக்ரம்?

துருவ் விக்ரம் - சஞ்சய்

துருவ் விக்ரம் - சஞ்சய்

இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால், அது விக்ரம் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், மகான் படத்தின் வெளியீட்டை கொண்டாடி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகக் கூறப்படுகிறது.

    மகான் படத்திற்கான ப்ரொமோஷன் வீடியோ நேர்க்காணல் ஒன்றில் பேசிய துருவ், சஞ்சய் தன்னை அணுகினால், அவர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகக் கூறினார். துருவ் விக்ரம் மற்றும் ஜேசன் சஞ்சய் இருவரும் சிறுவயது நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால், அது விக்ரம் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

    கண்ணம்மா பிறந்தநாளுக்கு வருவானா பாரதி? விறுவிறுப்பான காட்சிகள்!

    ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்கத்தில் வெளிநாட்டில் தனது படிப்பை முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் தனது தந்தை விஜய்க்காக ஒரு படத்தை இயக்க விரும்புவதாகவும், விரைவில் அவருக்காக ஸ்கிரிப்ட் எழுதுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்

    இதற்கிடையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘மகான்’ படம் நேற்று ஓடிடி-யில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actor Vikram, Dhruv Vikram

    அடுத்த செய்தி