Thalapathy Vijay: நண்பர்களுடன் ஜாலி ட்ரைவ் - கவனம் பெறும் விஜய் மகன் சஞ்சய் வீடியோ!

மகனுடன் விஜய்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

  • Share this:
    நண்பர்களுடன் ஜாலியாக நேரம் செலவிட்ட விஜய் மகன் சஞ்சய்யின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

    தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பாவுடன் ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளதால், ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். விரைவில் அவர் சினிமாவில் அறிமுகமாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய் கனடாவில் திரைப்படத்துறையில் தனது உயர் படிப்பை முடித்துள்ளார். அதோடு திரைக்கதை மற்றும் இயக்கத்திலும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிப்பதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அதோடு விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கும் 'உபென்னா' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் சஞ்சய் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், சஞ்சய் நண்பர்களுடன் வெளியே சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அதில், வேறொருவர் காரை ஓட்ட, அதில் ஒலிபரப்பான பாடலை சஞ்சய் என்ஜாய் செய்வதை பார்க்க முடிகிறது. இதை விஜய் ரசிகர்கள் லைக் செய்தும் பகிர்ந்தும் வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: