ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல நடிகருடன் விஜய் மகன் சஞ்சய்! வைரலாகும் படம்...

பிரபல நடிகருடன் விஜய் மகன் சஞ்சய்! வைரலாகும் படம்...

சஞ்சய்

சஞ்சய்

படம் இயக்குவதில் ஆர்வமுள்ள சஞ்சய், அது சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முன்னணி நடிகருடன் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்ததையடுத்து சென்னை திரும்பினர் படக்குழுவினர். அந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மற்ற படங்களைப் போல ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் தடைப்பட்டது. இதையடுத்து தற்போது அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதற்கடுத்து தனது 66-வது படமாக நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். படம் இயக்குவதில் ஆர்வமுள்ள சஞ்சய், அது சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து வருகிறார்.

Thalapathy Vijay son Jason Sanjay picture with Nivin Pauly goes viral, Nivin Pauly, nivin pauly movies, malayalam actor nivin pauly, நிவின் பாலி, நிவின் பாலி திரைப்படங்கள், நிவின் பாலி மலையாள திரைப்படங்கள், jason sanjay, jason sanjay wife, jason sanjay age, jason sanjay now, jason sanjay instagram, jason sanjay movies, jason sanjay 12th mark, jason sanjay in vettaikaran, vijay son sanjay, விஜய் மகன் சஞ்சய், தளபதி விஜய், விஜய் மகன் படங்கள், சஞ்சய் விஜய் படங்கள்
நிவின் பாலியுடன் சஞ்சய்

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து சஞ்சய் எடுத்துக் கொண்ட படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay