Home /News /entertainment /

யுவன் ஷங்கர் ராஜாவின் வெறியனான விஜய் மகன் சஞ்சய் - வைரலாகும் வீடியோ

யுவன் ஷங்கர் ராஜாவின் வெறியனான விஜய் மகன் சஞ்சய் - வைரலாகும் வீடியோ

யுவன் - மகனுடன் விஜய்

யுவன் - மகனுடன் விஜய்

கொஞ்ச நாள் கழிச்சு விஜய் சாரை மீட் பண்ணும்போது, நான் தான் அந்த ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். என் பையன் உங்களோட பயங்கரமான வெறியன்னு சொன்னார்.

    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் ஜோசப் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்பது தான் இன்றைய இணைய வைரல்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஞ்சய் லண்டனில் ஃபிலிம் மேக்கிங் படிப்பை படித்து வருகிறார்.

    எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

    தற்போது அவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான 25-ம் ஆண்டை கொண்டாடும் நிகழ்வில் பேசிய அவர், “ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்துக்க விரும்புறேன். விஜய் சாருடன் இருக்கும் ஜெகதீஷ் எனக்கொரு ஃபோட்டோ அனுப்பினாரு. விஜய் சாரோட மகன் யுவனிசம்ங்கற டி-ஷர்ட் போட்டுருந்த ஃபோட்டோ அது. இதை பாத்து எப்படி ரியாக்ட் பண்ணனும்ன்னே எனக்கு தெரியல. அப்புறம் ஃபெண்டாஸ்டிக் ப்ரோன்னு மெசேஜ் அனுப்பினேன். கொஞ்ச நாள் கழிச்சு விஜய் சாரை மீட் பண்ணும்போது, நான் தான் அந்த ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். என் பையன் உங்களோட பயங்கரமான வெறியன். இது யுவனுக்கு தெரியனும்ன்னு தான் இதை அனுப்ப சொன்னேன்னு சொன்னார். இதை நான் வெளில போஸ்ட் பண்ணல. ஏன்னா இது பெர்சனலான விஷயம்ன்னு நினைச்சேன்” என்றார்.

    மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அபினய்?



    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Yuvan Shankar raja

    அடுத்த செய்தி