Home /News /entertainment /

தளபதி - தல கூட்டணியில் அடுத்த படம்? கோலிவுட்டில் உலாவரும் செய்தி!

தளபதி - தல கூட்டணியில் அடுத்த படம்? கோலிவுட்டில் உலாவரும் செய்தி!

விஜய்

விஜய்

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, தற்போது படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் விஜய் நடிக்கவுள்ள படத்தை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.அங்கு அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது.

    அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய விஜய் 66 படக்குழுவினர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினர். குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நடைபெற்று வருகிறது.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டைட்டில் மாற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை வெளியாகவுள்ளது.



    இந்நிலையில் தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, தற்போது படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்ததாக தோனியின் தயாரிப்பில் விஜய் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Also read... இன்று வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    அந்த வகையில் ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜய், தற்போது உள்ள படங்களை முடித்துவிட்டே இந்தப் படத்தில் நடிக்க முடியும் என்றும் தோனியிடம் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay, Dhoni

    அடுத்த செய்தி