திட்டமிட்ட நாளில் திரைக்கு வரும் 'மாஸ்டர்' - படக்குழு!

வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அறிவித்தபடி மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்கிறது படக்குழு

திட்டமிட்ட நாளில் திரைக்கு வரும் 'மாஸ்டர்' - படக்குழு!
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் திரைப்படம் திட்டமிடப்பட்ட நாளில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நேற்று 17.03.2020 முதல் வரும் 31 -ம் தேதி வரை திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அப்போதும் இதே நிலை தொடர்ந்தால் திரையரங்குகள் மூடல் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து படக்குழுவிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த சூழ்நிலை மாறி கொரோனா பாதிப்பின் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அறிவித்தபடி மாஸ்டர் படம் திரைக்கு வரும். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:அஜித் - விஜய் நட்பின் கதை - இருவர் கடந்து வந்த பயணத்தின் தொகுப்பு!
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading