ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 66 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்!

தளபதி 66 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்!

விஜய்

விஜய்

விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய் தனது தளபதி 66 படத்தின் 2-வது ஷெட்யூலை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.

விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படத்தின் முக்கிய படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இதற்கிடையே விஜய் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் காணப்பட்டார். அரசு விதித்துள்ள கட்டாய நிபந்தனைகளின் அடிப்படையில் முகமூடியுடன் நீல நிற சட்டையில் ஸ்டைலாக தோன்றினார். அதோடு சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகின்றன. கடந்த வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்தார். பின்னர், பிரகாஷ் ராஜ் மற்றும் 'தளபதி 66' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட படம் வைரலானது.

வயிற்றில் ரத்த கசிவு, அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் - சிம்பு அறிக்கை

பக்கா தமிழ் குடும்ப படமாக உருவாக இருக்கும் 'தளபதி 66' படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம், ஜெயசுதா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தமன் இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்க்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Thalapathy vijay