ஷாருக்கானின் பதான் பட ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள, பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் பதான் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் காவி நிறத்தில் தீபிகா படுகோன் பிகினி அணிந்திருந்தது வலதுசாரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”ஷாருக்கான் சாருக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ட்ரைலர் இங்கே” எனக் குறிப்பிட்டுள்ளார் விஜய். அவருக்கும் ஷாருக்கானுக்கும் இடையேயான நட்பு நாம் அனைவரும் அறிந்ததே. அட்லீயின் பிறந்தநாள் விழாவில் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின.
முன்னணி நடிகருக்கு கதை சொன்னதை உறுதிப்படுத்திய ஹெச்.வினோத்!
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
— Vijay (@actorvijay) January 10, 2023
சமீபத்தில் ட்விட்டரில் கலந்துரையாடிய ஷாருக்கானிடம், “விஜய் பற்றி கூறுங்கள்” என ரசிகர் ஒருவர் கேட்க, “அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் அமைதியானவர். எனக்கு அருமையான இரவு உணவையும் கொடுத்தார்” என பதிலளித்திருந்தார் ஷாருக்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.