ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்க நடிகர் விஜய் தான் காரணம் என மனம் திறந்து கூறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நெல்சன். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு மத்தியிலும் அப்படம் பெரியளவில் வசூலை குவித்தது.
டாக்டர் படம் ரிலீஸாவதற்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இரவில் பாலக்காடு கோயில் விசிட்... கவனம் பெறும் அஜித் புகைப்படங்கள்!
பீஸ்ட் படத்தின் முதல் இரு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதில் முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத்தும் ஜோனிடா காந்தியும் பாடியுள்ளனர். இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.
இதையடுத்து பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரைலர் வரும் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. ஆகையால் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு.
Beast Trailer: விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!
இந்நிலையில் ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அளித்துள்ள பேட்டியில், “விஜய் சாரும் ரஜினி சாரோட ரசிகர்ன்னு எல்லாருக்கும் தெரியும். ரஜினி சார் படம் பண்றதுக்கு என்னை மோட்டிவேட் பன்ணது அவர் தான். பீஸ்ட் படப்பிடிப்பு மும்முரமா போய்ட்டிருந்த நேரம், விஜய் சார் என் கிட்ட, ’ரஜினி சார் அடுத்தப் படத்துக்கான கதைகள் கேட்க ஆரம்பிச்சிருக்கார். நீங்க ஏன் முயற்சி பன்ணக் கூடாது?’ன்னு கேட்டார். ரஜினி சார் பெரிய லெஜெண்ட். அவருக்கு நான் எப்படி கதை எழுதுறதுன்னு தயக்கம் இருந்துச்சு. என்னோட அந்த தயக்கத்தை உடைச்சவர் விஜய் சார் தான். நீங்க இப்போவே கதை ரெடி பன்ணுங்க நெல்சா. இந்தப் படம் முடிக்கிறப்ப, ரஜினி சார் படம் தொடங்குறதுக்கு கரெக்ட்டா இருக்கும். உங்களுக்கு நடந்திடும்ன்னு உறுதியா சொன்னாரு. அவரோட பாஸிட்டிவிட்டி இதை சாத்தியமாக்கியிருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Nelson dilipkumar, Rajinikanth