ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு ரிலீஸ் மோதலுக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

வாரிசு - துணிவு ரிலீஸ் மோதலுக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

விஜய்

விஜய்

2014 பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒன்றாக வெளியாகியிருந்தது. அப்போதும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் விஜய்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு பட ரிலீஸ் குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய விஷயத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டார் ஷாம்.

விஜய்யின் 'வாரிசு' படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை பிரமாண்டமான முறையில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மறுபுறம், அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாளர்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே ’வாரிசு’ vs 'துணிவு' மோதல் குறித்து விஜய் ரியாக்ட் செய்துள்ளார். நடிகர் ஷாம் 'வாரிசு' படத்தில் விஜய்யின் சகோதரராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, “நடிகர் அஜித் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்று விஜய்யிடம் ஃபோனில் கூறினேன். அதற்கு அவர், நண்பர் படம் வரட்டும்பா, நன்றாக ஓடட்டும்பா என்றார்“ என தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் ஷாம். மற்ற நடிகர்களின் படங்களும் ஓட வேண்டும் விஜய்யின் நல்லெண்ணத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

2014 பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒன்றாக வெளியாகியிருந்தது. அப்போதும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் விஜய்.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!

அஜித்தின் 'துணிவு' படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஷாமை அணுகினார் ஹெச்.வினோத். ஆனால் அவர் விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி விட்டதால், துணிவு பட வாய்ப்பை தவற விட்டார். 'வாரிசு' கதை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஷாம், இதுவரை யாரும் இப்படி ஒரு கதையை யூகிக்கவில்லை என்றார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay