முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: கபடி கபடி... வெளியானது விஜய்யின் வாரிசு பட நீக்கப்பட்ட காட்சிகள்!

WATCH: கபடி கபடி... வெளியானது விஜய்யின் வாரிசு பட நீக்கப்பட்ட காட்சிகள்!

விஜய் - பிரகாஷ் ராஜ்

விஜய் - பிரகாஷ் ராஜ்

அந்த காட்சியில் பிரகாஷ் ராஜ் அலுவலகத்திற்கு சென்று கபடி கபடி... என மாஸ் காட்டுகிறார் விஜய். ரசிகர்களுக்கு செம டிரீட்டாக இந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்த படம் வாரிசு. இந்தப் படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருந்தது. கூடவே நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் அதே தினத்தில் வெளியானதால் இரண்டு படங்களின் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருந்தார்கள்.

அதற்கேற்ப இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. துணிவு படத்தின் வசூல் விவரம் வெளியிடப்படாத நிலையில், வாரிசு படத்தின் வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தது. தெலுங்கில் வாரிசுடு  என்ற பெயரில் வெளியான படம் அங்கும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

' isDesktop="true" id="903154" youtubeid="W9ON4NUSJ3g" category="cinema">

இதனையடுத்து இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து டெலிட்டட் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் பிரகாஷ் ராஜ் அலுவலகத்திற்கு சென்று கபடி கபடி... என மாஸ் காட்டுகிறார் விஜய். ரசிகர்களுக்கு செம டிரீட்டாக  அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தப் படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருந்தது. வம்சி இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயப்பிரதா, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu