ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதியின் வெறித்தனமான டான்ஸ் - வெளியானது 'வாரிசு' பட செலிபரேஷன் ஆஃப் வாரிசு பாடல் வீடியோ

தளபதியின் வெறித்தனமான டான்ஸ் - வெளியானது 'வாரிசு' பட செலிபரேஷன் ஆஃப் வாரிசு பாடல் வீடியோ

வாரிசு படத்திலிருந்து விஜய், ராஷ்மிகா, ஜெயசுதா

வாரிசு படத்திலிருந்து விஜய், ராஷ்மிகா, ஜெயசுதா

தமன் இசையில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல்களை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

துப்பாக்கி படத்துக்கு பிறகு சமூக அரசியலை பேசி வந்த விஜய் மீண்டும் குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்திருக்கிறார். விஜய் தனக்கே உரிய துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக அதுவும் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி போல் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கைதட்டல்கள் கிடைக்கின்றன. விஜய்யிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதனை பக்கவாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வம்சி.

குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் அதில் இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த பொங்கலுக்கு ஃபெஸ்டிவல் மோடுக்கு ஏற்ற படமாக வெளியாகியிருக்கிறது முதல் நாளில் தமிழ்நாடு அளவில் இந்தப் படம் ரூ.20.76 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="872211" youtubeid="ddIYPnCl6m8" category="cinema">

தமன் இசையில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல்களை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து செலிபரேஷன் ஆஃப் வாரிசு பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu