விஜய் மற்றும் அஜித்துக்கு படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய கே.கோவிந்தராஜ் வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்.
கோவிந்தராஜிடம் சிறந்த கலர் சென்ஸ் மற்றும் ட்ரெண்டான வடிவமைப்பு ஸ்டைல் இருந்ததாக பல திரையுலகினர் குறிப்பிட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றிய அவர் நடிகர் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ மற்றும் ‘காதலுக்கு மரியாதை’, நடிகர் அஜித் மற்றும் பார்த்திபனின் ‘நீ வருவாய் என’ சரத் குமாரின் ‘சூர்யவம்சம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
RRR Review: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் பிரமாண்டத்தின் புதிய மைல்கல்!
நடிகர் ராமராஜன், நடிகைகள் கனகா, சங்கீதா போன்ற பல பிரபலங்களுக்கு கோவிந்தராஜ் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார். அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் மற்றும் ராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து அவர்களது பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?

கோவிந்தராஜ்
இந்நிலையில் 82 வயதாகும் கோவிந்தராஜன் வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு சென்னை வளசரவாக்கத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.