முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 2 கோடி பார்வைகளுடன் சாதனைகளை தகர்த்தெறிந்த அரபிக் குத்து

2 கோடி பார்வைகளுடன் சாதனைகளை தகர்த்தெறிந்த அரபிக் குத்து

பீஸ்ட் அரபிக் குத்து

பீஸ்ட் அரபிக் குத்து

Vijay: இன்று மாலை 6 மணிக்குள் அதாவது 24 மணி நேரத்திற்குள் இன்னும் பல லட்ச பார்வைகளையும் லைக்குகளையும் இந்தப் பாடல் பெறும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து பாடலை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்தப்பாடல் தென்னிந்திய சினிமா இதுவரை படைத்திருந்த அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலை ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கியிருந்தனர். வித்தியாசமான அரபிக் குத்து பாடலை வெளியிட இருப்பதாக படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும், இசையமைப்பாளர் அனிருத்தும், பாடலை எழுதிய நடிகர்  சிவகார்த்திகேயனும் பாடலுக்கான புரமோவில் அறிவித்திருந்தனர். இது பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

நேற்று மாலை ஆறு மணிக்கு சன் பிக்சர்ஸ் இந்தப் பாடலை வெளியிட்டது. பாடல் வெளியானது முதல் உலகமெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் பாடலை கேட்க ஆரம்பித்தனர். யூடியூபில் மிகக் குறைந்த நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை இப்பாடல் கடந்தது. இன்று மதியம் வரை இரண்டு கோடி பார்வைகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்படப் பாடல்களில் குறைந்த காலத்தில் இவ்வளவு அதிக பார்வைகளை பெற்றிருப்பது  இந்த பாடலே.

நேற்று முன்தினம் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் கலாவதி பாடல் வெளியானது. இந்தப் பாடல் முதல் 24 மணி நேரத்தில் 1.6 கோடி பார்வைகளுடன் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று இதுவரை இருந்த அத்தனை சாதனைகளையும் முறியடித்தது.

Also read... அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!

அதற்கு ஒரு நாள் கழித்து வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து இன்று மதியத்திற்குள்ளேயே 2கோடி பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல் 20 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று மகேஷ் பாபு படப் பாடலில் சாதனையை முறியடித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்குள் அதாவது 24 மணி நேரத்திற்குள் இன்னும் பல லட்ச பார்வைகளையும் லைக்குகளையும் இந்தப் பாடல் பெறும். இப்போதைக்கு அரபிக் குத்துவின் சாதனையே வேறு எந்தப் பாடலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.

First published:

Tags: Actor Vijay, Anirudh, Beast, Nelson dilipkumar, Sivakarthikeyan