Home /News /entertainment /

Beast: விஜய்யின் ’பீஸ்ட்’ படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்! அப்டேட் என்ன தெரியுமா?

Beast: விஜய்யின் ’பீஸ்ட்’ படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்! அப்டேட் என்ன தெரியுமா?

பீஸ்ட் செகண்ட் லுக்

பீஸ்ட் செகண்ட் லுக்

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடம்பெறும் பாடல் காட்சி படமாக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்ததையடுத்து சென்னை திரும்பினர் படக்குழுவினர். இங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு திட்டமிட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மற்ற படங்களைப் போல ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் தடைப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து அந்ததந்த மாவட்டங்களுக்கு ஏற்றபடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் படபிடிப்பை நடத்தவும் தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இன்று சென்னையில் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடம்பெறும் பாடல் காட்சி படமாக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay

    அடுத்த செய்தி