ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ஆடியோ லாஞ்சை முடித்த கையோடு லண்டன் செல்லும் விஜய்... எதற்கு தெரியுமா?

வாரிசு ஆடியோ லாஞ்சை முடித்த கையோடு லண்டன் செல்லும் விஜய்... எதற்கு தெரியுமா?

தளபதி விஜய்

தளபதி விஜய்

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு இசை வெளியீட்டு விழாவை முடித்த கையோடு, கிறிஸ்துமஸை கொண்டாட நடிகர் விஜய் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் தொடங்க உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகின. டிசம்பர் 23 அல்லது 24-ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நடக்கும் என்றும், அதன் பிறகு விஜய் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் லண்டன் சென்று அவரது பெற்றோரை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிம்பு பாடிய இரண்டாவது சிங்கிள் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, சங்கீதா, சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay