Home /News /entertainment /

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு படம் இணையத்தில் மீண்டும் லீக்

விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு படம் இணையத்தில் மீண்டும் லீக்

வாரிசு

வாரிசு

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக 'வாரிசு' இருக்கும் எனத் தெரிகிறது.

    நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு படம் இணையத்தில் லீக்காகியதால் அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.

    விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து 'வாரிசு' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூலிற்காக படக்குழு விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளது. இதில் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றன. படப்பிடிப்பில் விஜய் ஈடுபட்டிருக்கும் போது, ​அவரது ரசிகர்களில் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் படப்பிடிப்பில் இருந்து படங்கள் கசிவது இது முதல் முறையல்ல. படப்பிடிப்பு தளங்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 'வாரிசு' படத்தின் படங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன.

    ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக 'வாரிசு' இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் செட்டில் இருந்து கசிந்த பல படங்களில் விஜய் பல்வேறு வகையான உடைகளில் காணப்படுகிறார். 'வாரிசு' படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பரில் முடிவடையும் என்றும், படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மஞ்சிமா மோகனை விரைவில் கரம் பிடிக்கும் கெளதம் கார்த்திக்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, தனக்கு பிடித்த நடிகருடன் திரையை பகிர்ந்துக் கொள்வதில் உற்சாகமாக உள்ளார். 'வாரிசு' தமிழ் - தெலுங்கில் உருவாகிறது. இதில் பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு மற்றும் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் படத்தின் முதல் சிங்கிள் டிராக் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி