• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: குடும்ப விழாவில் விஜய் பெற்றோருடன் விஷால் - வைரலாகும் படம்!

Thalapathy Vijay: குடும்ப விழாவில் விஜய் பெற்றோருடன் விஷால் - வைரலாகும் படம்!

விஜய் பெற்றோருடன் விஷால்

விஜய் பெற்றோருடன் விஷால்

பீஸ்ட் படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகும் படத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 66 என்றழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார்.

  • Share this:
    நடிகர் விஜய்யின் பெற்றோருடன் நடிகர் விஷால் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    பீஸ்ட் படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகும் படத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 66 என்றழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். 2022 ஏப்ரலில் இதன் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் நடிகர் விஷால் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் நடந்த குடும்ப விழாவில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஜய் மற்றும் விஷால் ரசிகர்கள் அந்தப் படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: