ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அன்பாக அழைத்த ஷோபா!

Thalapathy Vijay: விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அன்பாக அழைத்த ஷோபா!

விஜய் - ஷோபா சந்திரசேகர்

விஜய் - ஷோபா சந்திரசேகர்

விஜய்யும் ஷோபாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் கூட நடித்துள்ளனர், அது விஜய் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் பிரபல இணையதளத்தின் சமையல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஷோபா சந்திரசேகர், தனது மகன் விஜய்க்கு லைவில் போன் செய்து பேசினார். அப்போது அவரை செல்ல பெயரில் அழைத்தார்.

  விஜய்யின் நட்சத்திர அந்தஸ்துக்கு அளவே இல்லை, பலருக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார். அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தனது தோழியுடன் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவில் தனது மகன் விஜய்க்கு போன் செய்தார். அப்போது பேசும்போது விஜய்யின் செல்லப் பெயரை குறிப்பிட்டு அழைத்தார். ஆம்! அவர் விஜய்யை 'ஜோ' (அவரின் முழுப்பெயர் ஜோசப் விஜய்) என்றும், சர்க்கரை பொங்கல் அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

  ஷோபா சந்திரசேகரும் ஒரு பாடகியாவார். அவர் தனது மகனுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட் பாடல்கள். விஜய்யும் ஷோபாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் கூட நடித்துள்ளனர், அது விஜய் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது.

  நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

  இதற்கிடையே தற்போது விஜய்யின் 'வாரிசு' படம் இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பொங்கலுக்கு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், சங்கீதா, ஷாம், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay