• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய்?

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய்?

விஜய்

விஜய்

உள்ளாட்சித் தேர்தலில் தனது படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்ற விஜய்யின் கட்டளையை மீறாத மக்கள் இயக்கத்தினர், வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு கேட்டனர்.

  • Share this:
    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் வழக்கம் போல திமுகவும், அதிமுகவும் முதல் இரு இடங்களை பிடித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    இவர்களின் இந்த வெற்றி அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும் கவனிக்க வைத்தது. காரணம், உள்ளாட்சித் தேர்தலில் தனது படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்ற விஜய்யின் கட்டளையை மீறாத மக்கள் இயக்கத்தினர், வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு கேட்டனர்.

    அவர்களின் முயற்சிக்கு கை கொடுப்பது போல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றனர். இதைக் கேள்வி பட்ட விஜய் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை கேட்டிருந்தாராம். இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்து பல நாட்கள் கழிந்த நிலையில், நேற்று வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: